பறவைகள்
Author :
Hema
Blog :TELL A STORY - MY WAY
Date: 8/30/2012 2:02:00 PM
This is my first post in Tamil. I had just written a very common topic. The crux of this essay is to show how birds were such an integral part while growing up and how they are slowing being endangered. The future generation, like my son, might never get to know the pleasures of nature. Its such a sad thing. It has been more than a decade since I have written anything in Tamil (and I feel ashamed as I say this, this being my mother tongue). Please bear with me if I have committed any mistake, be it spelling or meaning.
சிறு வயதில், எதுவும் சுமையாக தெரியாத வயதில், சுற்றி திரிந்து விளையாடி களைத்த வயதில், மொட்டை மாடியில் இரு கைகளை பஞ்சனை ஆக்கி தலை சாய்த்து வானை ரசிப்பேன்.
கூட்டம் கூட்டமாய் வானை ஆளும் பறவைகள். எங்கு செல்லும், எப்படி வழி தெரியும், என்ன செய்யும், எதுவும் தெரியாது. அனால் அவைகளும் தன கூட்டிற்கு, தன குடும்பம் இருக்கும் இடதிற்கு நம்மை போல் இரவு இளைப்பாற செல்கின்றன என்று மட்டும் தெரியும். அன்று என் தோழிகள் சொல்வார்கள், பறவைகளை பார்த்து பற.. பற.. என்று சொல்லி நகத்தை தேய்த்தால், வெள்ளை புள்ளிகள் விழும் என்றும், அவை பறவைகளால் நமக்கு கிடைக்கும் புது ஆடைகளின் அடையாளம் என்றும் கூறுவார்கள். எனக்கு புது ஆடை கிடைத்தது தானாகவே கூட அமைந்திருக்கலாம், அனால் ஏனோ அந்த பறவைகளுக்கு நன்றி சொல்ல தோன்றும்.
நான் காக்கா, குருவி, கோழி இவைகளை தவிற பெரிய பறவைகளை உயிரியல் பூங்காவில் மட்டுமே கண்டதுண்டு. அவைகளை நெருக்கத்தில் கண்டால் எனக்கு பயம். இதை Phobia என்றும் கூறுவர். அலறிவிடுவேன். ஆனால் அதையே தூரத்தில் கண்டால் மனது லயத்து, லேசாகிவிடும்.
இது இயற்கையால் மட்டுமே கொடுக்க கூடிய சாந்தி. பறவைகளின் கூப்பாடு காதுகளுக்கு ஓர் இனிய பாடல், கவிதை! பண்டை காலத்து கடிகாரம் என்றே கூட கூறலாம். இவை கூவித்தான் பொழுதே விடிகிறது. சிறு வயதில் குருவிகளுக்கு எங்கள் வீட்டில் கூடு அமைத்த ஞாபகம். இன்றோ குருவிகளே இல்லாத ஒரு அவலம். நான்கு மணி நெல் போட்டால் வீட்டையே சுற்றி வரும் குருவி, அது சத்தம் இல்லாமல் போயிருந்தால், நிசப்தத்தில் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கும்.
இன்றோ பல spa மற்றும் parlor போன்ற இடங்களில் அருவி கொட்டும் இசை, பறவைகளில் சத்தம், பூச்சிகளின் ரீங்காரம் ஆகியவற்றை பதிவு செய்து நமக்கு ஒரு paradise போன்ற ஒரு சூழலை தருகிறார்கள். இயற்கையை அழித்துவிட்டு ஓலியை மட்டும் வைத்துக்கொண்டு என் செய்வது.
வாழ்கை மாறிவிட்டது, பயணம் மாறிவிட்டது. "குருவியே இல்லையே" என்று நான் என் அம்மா வீட்டிற்க்கு திரும்பிய பொது கேட்டான். (சில வருடங்கள் நாங்கள் அயல் நாட்டில் இருந்தோம்). வருத்தத்துடன் அம்மா சொன்னார், "அது வரும் என்று தான் தினமும் அரிசியை வைக்கிறேன்" என்று. இன்று சில இடங்களில் அவை மீண்டும் பறக்கின்றன என்று கூறுகிறார்கள், ஆனால் நான் இனி தான் காண வேண்டும். மைனா அழிந்து விட்டது என்றே கூறுகிறார்கள். அத்துணைக்கும் கரணம் நமது கைபேசி. ஒரு வகையில் இது சாபம் தான், இதன் பலன்களை விட இடையுறுகளே அதிகம்.
வாழ்கை ஒரு ஓட்டமாகவே இருந்தது. அதில் விடியற்காலை நேரங்களில் மொட்டை மாடி "சில்" காற்றில் படிக்கும் நேரங்களில் மைனாவும் குயிலும் கூவும் போது, ஒரு சில மணி துளிகளுக்கு ஓர் இதமான கவன சிதறல். அப்பொழுது நினைப்பேன், இன்று நான் படிக்க வேண்டும், இன்னும் சில ஆண்டுகளே; அப்பொழுது நான் வரும் பொது நீங்கள் எனக்காக இதை போன்றே கச்சேரி அமைக்க வேண்டும் என்று. இதோ இப்போழுது நான் சும்மா தான் இருக்கிறேன் ஆனால் எங்கே மைனா, எங்கே குருவி. கொன்று புதைத்து விட்டோம்.
தொலைகாட்சியில் கேட்டது, "மண் எங்கும் காலடி சுவடுகளின் ஆக்கிரமிப்பு. ஒவ்வொரு மனிதனும் தன் சுவட்டை விட்டு செல்ல வேண்டும் என்று போராடுகிறான். எங்கு சென்றாலும் ஒரே குழப்பம். அண்ணார்ந்து வானை பார்க்கின் கூட்டம் கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகள். ஒன்றிற்கும் பாதைகள் இல்லை, எல்லைகள் இல்லை. ஒத்து வாழும் இவைகளுக்குள் சிறகுகளின் சுவடுகளும் இல்லை".
பறவைகள் சுதந்திரத்தின் சின்னம், சுதந்திரத்தின் அடையாளம், அமைதியின் வடிவம். இவைகளை வானில் சுதந்திரமாக பறக்கும் பொது பார்க்கும் நம் உள்ளத்தில் எத்துனை மகிழ்ச்சி. இதையே ஒரு சில பேர் பேணி காத்தல் என்ற பெயரில் கூண்டுகளில் அடைத்து, உணவு அளித்து பாதுகாக்கின்றன. இவ்வாறு கூண்டுகளில் அடைப்பதால் ஒன்று, இரண்டு மட்டுமே அந்த இனத்தில் பாதுகாப்பாக இருக்கலாம். மற்றவை? இரு பறவைகளை கொண்டு இனத்தை பாதுகாக்க முடியுமா? அதற்க்கு சுற்றுப்புற கேடு நேராமல் பார்த்துக்கொண்டாலே போதும்.

 |
| Thanks Aravind.. Poor birds with tail feather cut |
மேலும் உங்களை ஒரு கூண்டிற்குள் பூட்டி வைத்து தினமும் அன்னம் ஆகாரம் கொடுத்து வந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடுவீர்களா? அந்த சிறு பறவை வானத்தை பார்க்கும் போது அதன் மனம் பதைபதைக்காதா? அதற்கு தானும் பறக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்காதா? மனிதனுக்கு மட்டுமே இந்த மனநிலைகள் சொந்தமா? அல்லது நம் மனம் இறுகி விட்டதா? நம் மகிழ்ச்சிக்காக மற்றொரு உயிரை வதைப்பதா?
இது ஒரு புறம் இருக்க அவைகளை வீட்டில் சுதந்திரமாக உலாவ விட அவைகளின் சிறகுகளை வெட்டி அவைகளை நிரந்திர ஊனம் ஆக்கும் உரிமையை நமக்கு யார் வழங்கியது? இவை நேரடியான இம்சைகள் என்றல் கைபேசி, வளர்ந்து வரும் விஞ்ஞானம் மறைமுகமானவை. மேலும் நாம் வாழ மரத்தை வெட்டி வீடு கட்டுகிறோம், பறவைகள் எங்கு செல்லும். சென்னையை அடுத்து உள்ள வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலங்கள் வீடுகளாகவும் குப்பை தொட்டிகலாகவும் மாறிவிட்டதால், இப்பொழுது இங்கே வரும் பறவைகளை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அப்பொழுதும் இந்த பறவைகளின் நிலை அந்தோ பரிதாபம். வேளச்சேரி நரசிம்மர் கோவில் மரத்தில் கூட்டம் கூட்டமாய் நாரைகள் கூடுகள் அமைத்ததை பார்த்து அனைவரும் மிகவும் வருந்தினர்.
 |
| Polluted Pallikaranai Marsh (All images via google) |
பறவைகளை பேணுவோம். நாம் இருக்கும் இந்த பூமியை சொர்கம்மாக மாற்ற இவைகளாலே முடியும். நம் தேவைகளை குறைத்தால் இது சாத்தியமே! மனமே சிறிது சிந்தித்து பார்! மனித நேயம் இருப்பின் கண் திறந்து பார்!