கிறுக்கல்கள் - 118
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/16/2012 1:23:00 PM
குறுங்கவிதைகள்
01.
எது அழகென்பதை
வரையறுத்து கொண்டிருந்தேன்
வட்ட நிலவு
வண்ணங்கள் நிறைந்த மலர்கள்
மழலையின் சிரிப்பு
மழைக்கால மேகம்
நெல்வயலில் ஒற்றை மரம்
நெரிசல் நிறைந்த அலைகள்
காலைநேர சூரிய உதயம்
இப்படி ஏதோதோ
வரிசையாய் நின்றன
உன்னை பின்தொடர்ந்து...!
02.
பார்வை மட்டுமே
வேலையென்று இருந்தேன்;
புன்னகைக்கவும்,
சிறை பிடிக்கவும்,
மௌனமொழி பேசவும்