Skip Navigation Links


இந்தப்புன்னகை என்ன விலை?

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 02-06-2013 18:37:00

'வெகு நாட்களாக, தூரிகைக‌ளைத்தொடவில்லை. திடீரென்று இந்த ஓவியத்திற்கான புகைப்படம் மனதைக் கவர்ந்தது. அந்தப்பார்வையும் புன்னகையும் அடிக்கடி என் பார்வையில் படும்போதெல்லாம் கைகள் நமைச்சலெடுத்துக்கொண்டேயிருந்தன. ஒரு வழியாக வரைந்து விட்டேன்! வெறும் கறுப்பு, வெண்மை நிற வண்ணங்கள் மட்டும் தான்!! இதோ, உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!!'

Read full article

முத்துக்குவியல்-20!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 27-05-2013 06:59:00

'அஞ்சலியாய் சில முத்துக்கள்!!நேற்று மறைந்த பின்னணிப்பாடகர் திரு.டி.எம்.எஸ் செளந்திரராஜன் கணக்கிலடங்காத நினைவலைகளையும் அதிர்வலைகளையும் பல்லாயிரக்கணக்கான இதயங்களில் தனது மறைவிற்குப்பின்னால் ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேன்டும். நவரசங்களில் எத்தனைப் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்! அவரது குரலினால் நடிகர்களின் நடிப்பு சிறப்படைந்ததா அல்லது நடிகர்களின் நடிப்பினால் அவரின் இசைக்கு மெருகேறியதா என்று அந்தக்காலத்திலேயே பட்டிமன்ற ஸ்டைலில் விவாதங்கள் நடந்ததுண்டு.துன்பமான நேரங்களிலும் மன அ(...)'

Read full article

வீட்டுக்குறிப்புகள்!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 19-05-2013 19:49:00

'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப, சின்னச் சின்ன வீட்டுக்குறிப்புகள் சில சமயங்களில் பெரிய அளவில் பலனைக்கொடுக்கிறது. பல வருடங்களுக்கு முன், என் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஃப்ரீஸரிலிருந்து மீனை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பக்கவாட்டிலிருந்த பெரிய முள் ஒன்று சரேலென்று விரலினுள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளி வந்து நின்றது. வலியில் துடிதுடித்து உடனேயே மருத்துவரிடம் சென்றதில் அவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றார். அடுத்த சில(...)'

Read full article

காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 12-05-2013 18:11:00

'அன்றைய காலத்தில், பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வரும்போது, அவர்கள் வந்து விட்டுச் சென்றதும் வீட்டில் பெற்றோர்கள் கேட்பார்கள், ‘மாப்பிள்ளையைப்பிடித்திருக்கிறதா’ என்று! அதற்கு பதிலே வராது. அப்படி பதில் வந்தாலும் ‘ உங்களுக்குப்பிடித்திருந்தால் சரி !’ என்ற பதில் தான் வரும். இன்றைக்கோ இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி மாறி விட்டன! ‘ எனக்கேற்ற மாப்பிள்ளையை சரியாக கணித்துப்பார்க்க என் பெற்றோருக்குத் தெரியவில்லை’ என்று தொலைக்காட்சி  விவாதங்களில்கூட பெண்கள் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சொல்கிறா(...)'

Read full article

காலங்கள் வரைந்த கோலங்கள்!!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 06-05-2013 19:23:00

'வெளியே சென்று திரும்பிய என் கணவரின் கைகளில் இரண்டு திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. ' தபால் பெட்டியில் கிடந்தன. எடுத்து வந்தேன்' என்றார்கள். யாரென்று கவனித்ததில் இரண்டுமே தூரத்து உறவினர்களின் பெண்களின் திருமணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவலுமில்லை. எந்தக் கடிதமோ, அழைப்போ எதுவுமேயில்லை. உலகம் தான் எத்தனை சுருங்கி விட்டது!அந்தக் காலத்தின் திருமணங்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை குதூகலம்! இரன்டு நாட்களுக்கு முன்னரேயே விருந்தினர்கள் வருகையாலும் (...)'

Read full article

ஹரிதாஸ்- ஒரு பார்வை!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 28-04-2013 18:41:00

'இரு மாதங்களுக்கு முன்பே வெளி வந்திருந்தாலும் இப்போது தான் ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மனதை அங்கங்கே நெகிழ வைக்கிற, கண்கள் கலங்க வைக்கிற, உடலும் மனமும் செயல்களும் நன்றாக இருக்கிற நமக்கெல்லாம் அப்பால் மனம், உடல், செயல்கள் அனைத்திலும் குறைபாடுகள் உள்ள ஒரு உலகத்தைப்பற்றிப் புரிய வைக்கிற ஒரு அருமையான திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்பட்டது.படத்தைப்பற்றி மேலே சொல்லும் முன்னால் ' ஆட்டிஸம்' எனப்படும், இன்னும் பரவலாக அறியப்படாத, விழிப்புணர்வு தேவைப்படுகின்ற ஒரு நரம்பு சம்பந்தம(...)'

Read full article

ஷார்ஜா உணவுத் திருவிழா!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 21-04-2013 06:40:00

'முன்பெல்லாம் ஷார்ஜாவில் நகரத்திற்குள்ளேயே எக்ஸ்போ என்று பெயரிட்ட  பெரிய வளாகத்திற்குள் நவீனக்கூடாரங்கள் அமைக்கப்பட்டு பல வித கண்காட்சிகளை நடத்தப்பட்டு வந்தன. வருடம் பூராவும் புத்தகக் கண்காட்சி, கைக்கடிகார கண்காட்சி, தொழில் சாதனக்கள் கண்காட்சி, கல்வி சம்பந்தமான கண்காட்சி, ரமதான் கண்காட்சி என்று மிகவும் சுவாரஸ்யமாக கண்காட்சிகள் இருக்கும்.  வருடம் ஒரு முறை உணவுக்காக கண்காட்சி அமைக்கும்போது, அதுவும் நுழைவுக்கட்டணமில்லை என்னும்போது கூட்டம் அலை மோதும்.இப்போது இந்த எக்ஸ்போ வளாகம்(...)'

Read full article

முத்துக்குவிய‌ல்-19!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 14-04-2013 19:41:00

'அழகிய முத்து:மேஜை மலை:மேடு பள்ளமாக உயர்ந்து நிற்கும் மலைகளிடையே விதிவிலக்காக, வித்தியாசமாக ஏறக்குறைய சமதளமான மேற்பரப்புடன் காட்சியளிக்கிறது இந்த மேஜை மலை. 1087 மீட்டர் நீளத்துடன் இந்த மலை தென் அமெரிக்காவில் தொடங்கி 'கேப் ஆப்ஃ குட் ஹோப்'பில் முடிகிறது. இம்மலையின் பெரும்பகுதி மணற்பாறையால் ஆனது. பனி படர்ந்த இம்மலையின் மேற்பரப்பைப் பார்க்கையில் வெள்ளைத்துணி போர்த்திய பெரிய மேஜை போல இருப்பதால் இந்தப் பெயர் அதற்கு வந்தது. மேலூரிலிருந்து மதுரை செல்லும்போது, மதுரையை நெருங்கும்போது இது போன்ற(...)'

Read full article

அதி ருசியான முத்து!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 07-04-2013 19:19:00

'சமையல் முத்து இன்று இனிப்பைத்தாங்கி வருகிறது!இது எல்லோருக்குமே மிகவும் பிடித்த ஒரு இனிப்பு!கிராமப்புறத்து பழமையான இனிப்பு! ரொம்பவும் குறைந்த பொருள்களைக்கொண்டு அதி ருசியைக் கொடுக்கக்கூடிய பால் கொழுக்கட்டையைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன். வெறும் அரிசிமாவுடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய் மட்டுமே சேர்த்து செய்து விடலாம் இதை! என் அம்மா வீட்டில் 40 வருடங்களுக்கு முன்பு இதை அடிக்கடி செய்வது நினைவுக்கு வ‌ருகிறது. நல்ல பச்சரிசியை ஊற‌வைத்து, பின் தண்ணீரை வ‌டித்து நிழலில் உலர வைத்து, உரலில் இடித(...)'

Read full article

பாலையில் ஒரு சரணாலயம்!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 31-03-2013 19:28:00

'இங்கு ஷார்ஜாவில் ஒரு புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சரணாலயத்திற்கு அடிக்கடி போக வேண்டுமென்று நினைப்போமே தவிர அதை செயல்படுத்தியது கிடையாது. என் பேரனுக்காக என் மகனும் மருமகளும் நண்பர்களுடன் சென்று ரசித்து வந்து விட்டு எங்களையும் அழைத்துப்போக வேண்டுமென்று நச்சரித்துக்கொண்டேயிருந்ததால் ஒரு வழியாக இரன்டு நாட்களுக்கு முன்னால் நானும் என் கணவரும் அவர்களுடன் கிளம்பினோம். ஷர்ஜாவிலிருந்து 28 கிலோ மீட்டர்  தூரத்தில் அல் தாய்த் என்னும்(...)'

Read full article

அன்பென்பது....!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 25-03-2013 19:01:00

'சகோதரர் வெங்கட் நாகராஜ் இந்த ஓவியத்தை வெளியிட்டு, இதற்குப்பொருந்துமாய் கவிதை புனையச்சொல்லி அனைத்துப்பதிவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த ஓவியத்தைப்பார்த்ததும் சொக்கிப்போனேன். நிறைய சிந்தனைகளை, பழைய நினைவலைகளை, இளம் வயதில் படித்தவற்றை அந்த ஓவியம் கிளறி விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!சங்க இலக்கியங்களில் காதலர்க்கு இடையில் இந்த அன்னம் மட்டுமல்ல, தும்பியும் குயிலும் வண்டும் மயிலும் பறவைகளும் தூதுவர்களாய் புனையப்பட்டார்கள்.நளவெண்பாவில் நளன் அனுப்பிய அன்னம் தமயந்திய(...)'

Read full article

சமையலறையில் மருத்துவம்!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 19-03-2013 02:00:00

'நம் சமையலறையில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் எத்தனையோ பொருள்கள் மருத்துவ நன்மைகளை அதிகமாய்த் தரக்கூடியவை. நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, உடனேயே மருத்துவரிடம் செல்லாமல் நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள‌க்கூடிய மருத்துவ முறைகள் ஏராளமாய் வெந்தயம், ஏலம், மிளகு, எள், சீரகம், உளுந்து போன்ற பொருள்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் இங்கே!மருத்துவ முத்துக்கள்!!அரிசித்திப்பிலியும் 10 சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் தொடர் விக்கல் சர(...)'

Read full article

பயணங்கள்- தொடர்ச்சி!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 10-03-2013 17:18:00

'மறக்க முடியாத பயண அனுபவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அது மகிழ்வான அனுபவமாக அமைந்து விட்டால் மனதுக்கு எப்போது நினைத்தாலும் நிம்மதியையும் மலர்ச்சியையும் தருவதாக அமைந்து விடும். அதுவே மோசமானதாக, பல வித பிரச்சினைகளும் சமாளிக்க முடியாத இடர்ப்பாடுகளையும் கொண்டதாக அமைந்து விட்டால் எப்போது நினைத்தாலும் சஞ்சலமடைய வைத்து விடும். சில சமயம் அதுவே பல படிப்பினைகளுக்கு காரண‌மானதாக அமைந்து விடும்.1994ஆம் ஆண்டு நாங்கள் தாய்லாந்து, ஹாங்காங், மலேஷியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு சுற்றுலா(...)'

Read full article

பயணங்கள் !!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 03-03-2013 16:20:00

'இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மலைக்கோட்டை விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. நானும் என் கணவரும் பத்தரைக்கு கிளம்ப வேண்டிய ரயிலில் ஏற ஒன்பதரைக்கே ரயில்வே ஸ்டேஷன் சென்று விட்டோம். பத்தரை ஆனதும் தான் தெரிந்தது வண்டி 2 மணி நேரம் தாமதம் என்று! குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பயணிகள் அறையில் கட்டணம் செலுத்தி ஒரு மணி நேரத்தைப்போக்கினோம். ரயில் உடனே வருகிறது என்று யாரோ சொன்னதை நம்பி அந்த இருக்கையைக் காலி செய்து வந்து விட்டதில் பின்னர் அதிலும் இடம் கிடைக்க வில்ல(...)'

Read full article

முத்துக்குவியல்-18!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 20-02-2013 09:33:00

'ஒரு மாத இதழில் படித்த இந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. அனைவரும் இந்த செய்தி தரும் எச்சரிக்கைகளால் விழிப்புணர்வு பெற வேன்டுமென்றே இங்கே இதை எழுதுகிறேன்.அதிர்ச்சியடைய வைத்த முத்து:அமெரிக்காவில் கடந்த ஜுன் மாதம் 29 வயது இளைஞன் தன் படுக்கையறையில் ஏராளமான தீக்காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறான். போலீஸ் ஒரு தடயமும் இல்லாமல் மூளையைப்போட்டு கசக்கிக் கொண்டு காரணம் தேடியிருக்கிறது. கடைசியில் இந்த மரணத்துக்கு அவன் உபயோகித்த லாப்டாப்பே காரணம் என்று கண்டு பிடித்தனர். அந்த இளைஞன் தனது ம(...)'

Read full article

துபாயில் உலகக் கண்காட்சி!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 07-02-2013 04:04:00

'சென்ற வருடம் இங்கே துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அகில உலகக் கண்காட்சி ப‌ற்றிக் குறிப்பிட்டிருந்தேன். புகைப்படங்களையும் இணைத்திருந்தேன்.ஒவ்வொரு வருடம் அக்டோபர் இறுதியிலிருந்து மார்ச் வரை இது நடைபெறுகிறது. அனைத்து நாடுகளும் அவர்களின் அரங்கங்களை அசத்துமாறு ஒவ்வொரு வருடமும் அமைத்திருப்பார்கள். இது அமைந்திருக்கும் இடத்திற்கு குளோபல் வில்லேஜ் என்று பெயர். பொதுவாய் இந்திய அரங்கம் பிரம்மாண்டமாய் இருக்கும். ஆனால் அதில் பெரும்பாலும் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கடைகள் போடுவதில்லை. வட இந்த(...)'

Read full article

முள்ளங்கி ரசம்!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 28-01-2013 03:59:00

'செய்திகள், சிந்தனைகள், அனுபவங்களின் சிதறலுக்கு சற்று மாறுதலாய் நாக்கின் சுவையரும்புகளை மீட்டியிழுக்க ஒரு சமையல் முத்து இன்றைக்கு! நிறைய சமையல் குறிப்புகள் இருந்தாலும், சமையலுக்கென்றே ஒரு தளம் வைத்திருந்தாலும் இங்கே முத்துச்சிதறலில் வித்தியாசமான சமையல் குறிப்புகள் மட்டும் தான் பதிவிடுவேன். அந்த வகையல் இப்போதும் ஒரு வித்தியாசமான ‘ முள்ளங்கி ரசம்’ இடம் பெறுகிறது. நான் முன்பே இங்கே பதிவிட்டிருந்த ‘ வாழைத்தண்டு ரசம்’ போலத்தான் இதுவும். ஆனால் பிஞ்சான முள்ளங்கி மட்டும் கிடைத்து விட்டால் இத(...)'

Read full article

ஒரு அனுபவமும் சில முத்துக்களும்!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 20-01-2013 17:39:00

'அனுபவம்:பொதுவாக அவ்வப்போது என் சர்க்கரையின் அளவை இங்கேயே குளூக்கோமீட்டரில் பரிசோதனை செய்து கொள்வது எனக்கு வழக்கம். அதை முதல் முதலாக வாங்கிய போது, இங்குள்ள என் கணவரின் சகோதரர் அதை எப்படியெல்லாம் Hygienic ஆகக் கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். முக்கியமாக ஊசியை விரலில் குத்துவதற்கு முன் ஆல்கஹால் தடவிய பஞ்சால் விரலைத் துடைத்து பின் ஊசியால் குத்த வேண்டும்பின் இரத்தத்துளியை அதற்கான ஸ்ட்ரைப்பில் வைத்து குளுகோமீட்டரில் சொருக வேண்டும். அது ஒரு சில விநாடிகளில் நம் ரத்தத்தின் அப்போதை(...)'

Read full article

அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 13-01-2013 18:09:00

'இல்லம் தன்னில் அன்பும் மகிழ்வும் அனைத்து நல் பாக்கியங்களும்பொங்கிப் பெருக‌அனைத்து அன்புள்ள‌ங்களுக்கும் என்அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!அன்புள்ள‌ங்களுக்கு!!!நாளை பொங்கல் தினத்திலிருந்து ஒரு வாரம் வலைச்சர ஆசிரியப்பணி ஏற்குமாறு அழைத்த சகோதரர் சீனா அவர்களின் அன்பிற்கிணங்கி நாளை முதல் வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்கிறேன்!உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஊக்குவித்தலும் நிச்சயம் இப்பணியை சிறப்பாக செய்ய உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!(...)'

Read full article

முத்துக்குவியல்-17!!

Author : மனோ சாமிநாதன்      Blog : முத்துச்சிதறல்      Date : 07-01-2013 09:32:00

'பாதித்த முத்து:சமீபத்தில் படித்த செய்தி இது. பொதுவாய் பிறருக்கு நல்லது செய்வதைப்பற்றி ஆதி காலத்து செய்யுள்கள் முதல் இன்றைய காலத்து நூல்கள் வரை எத்தனையோ பேர் பாடியும் சொல்லியும் இருக்கிறார்கள். நாமெல்லோரும் செய்ய நினைப்பதும் விரும்புவதும் செய்வதும் செய்து பின் சுட்டுக்கொள்வதும் அதே தான். எத்தனை எதிர்மறை பாதிப்புகள் வந்தடைந்தாலும் நல்லன செய்வதை மறக்க வேண்டாம் என்று சான்றோரும் கூறியிருக்கிறார்கள் தான். ஆனால் ரொம்பவும் நல்லவராயிருப்பது சரி தானா என்று வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகள் (...)'

Read full article

Page 1 , Total 5 1 2 3 4 5 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

கடலூர் ரா.கார்த்திகேயன்(3)

mohamedali abdulkader(3)

Bagawanjee KA(2)

thudimannan(2)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(2)

Vel Tharma(2)

சி.பி.செந்தில்குமார்(2)

abirami(2)

IdlyVadai(2)

Abdul Basith(1)

மதி (GS)(1)

Jackiesekar(1)

பன்னிக்குட்டி ராம்சாமி(1)

ஒசை(1)

கும்மாச்சி(1)

Loshan ARV(1)

Rathna Peters(1)

விஜய்(1)

thiruthiru(1)

கலையரசன்(1)

அருள்(1)

mondia dinaex(1)

Prabhavathi(1)

banu venky(1)

Mohamed Ali Blog(1)

உஜிலா தேவி(1)

Jaleela Kamal(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

நண்டு @நொரண்டு -ஈரோடு(1)

Abilash Chandran(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

ASHROFF SHIHABDEEN(1)

Badri Seshadri(1)

பழமைபேசி(1)

pichaikaaran s(1)

வினையூக்கி(1)

பிரதிபலிப்பான்(1)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து(1)

Vathi kuchi(1)

kshetrayatraa(1)

கோவை கவி(1)

Sai Varadharajan(1)

mohamedali jinnah(1)

ranjani135(1)

Suresh Subramanian(1)

கோட்டகுப்பம்(1)

Arul Selva Per arasan(1)

பார்வதி இராமச்சந்திரன்.(1)

Bala subramanian(1)

கீத மஞ்சரி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com